சிறுகதை: சில்லரை இல்லீங்க
(In Facebook - சில்லரை இல்லீங்க) அது ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணி... லக்ஷணா தனது கிச்சனில் பிஸியாக இருந்தாள். அந்த அப்பார்ட்மெண்ட் காம்பவுண்டில் முதல் மாடியில் உள்ளது அவள் ஃபிளாட். எங்கே இன்னும் அவரைக் காணோம் என்று ஜன்னல் வழியாக பார்த்தாள். கரெக்டாக சொல்லிவைத்தது போல், அப்போதுதான் தனது பைக்கில் அப்பார்ட்மெண்ட் காம்பவுண்ட் உள்ளே நுழைந்த சந்தானம் அதை தனது ஃபிளாட் அருகினில் பார்க் செய்தான். சந்தானம்..லக்ஷணாவின் கணவன்.