சிறுகதை : திடுக்கிடாத திருப்பம்
(In Facebook - சிறுகதை : திடுக்கிடாத திருப்பம்) ரமேஷ் ரொம்ப ஹாப்பி. காலையில் தான் நிச்சயதார்த்தம் பண்ணி முடிச்சிருந்தான். அதுவும் அவன் ரொம்ப நாளா ஆசை பட்ட சஞ்சுளாவைத்தான்.சுருக்கமா சொன்னா, ‘இனிமே இவ உனக்குதாம்பா. கூடிய சீக்கிரமே இவளை மிஸஸ் சஞ்சுளா ரமேஷ் ன்னு மாத்த நாங்க உறுதியளிக்கிறோம்’னு சொல்லி இவங்க வீட்டு பெரிசுங்களும் அவங்க வீட்டு பெரிசுங்களும் நிச்சயம் பண்ண, ரமேஷ் வாஸ் இன் ட்ரீம்ஸ் யா. ‘மிஸஸ் சஞ்சுளா ரமேஷ்’! நினைத்துப் பார்க்கவே ’ஹனி’த்தது. நிச்சயம் செஞ்சு வைச்ச அப்பாவுக்கு தேங்க்ஸ். மனசில் நூறு முறை சொல்லிக்கொண்டிருந்தான்.