Posts

தூய தமிழ்

தூய தமிழ் பேசுபவர்களை கிண்டலடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே சமயத்தில் தூய தமிழில் தான் பேச வேண்டும் என்று அடம் பிடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. என்னைக் கேட்டால் தமிழ் அகராதியை இரண்டாக பிரிக்கலாம் என்று சொல்லுவேன். 'சங்க தமிழ்' மற்றும் 'வளர் தமிழ்'.

தமிழ் நாட்டை முன்னேற்ற - விவசாயம்

பெரிய பெரிய நிறுவனங்கள் ஒவ்வொன்றும், ஒரு குறைந்த பட்ச அளவாவது, சிறு விவசாய நிலங்களை தத்தெடுத்து விவசாயத்தை வளர்க்க வேண்டும்.

சிறுகதை: ஆப்பிள்

சாயந்திர நேரம். நான் என் அலுவலகத்தை விட்டு கிளம்பும் நேரம். லேப்டாப்பை மெதுவாக ஷட்டவுன் பண்ணினேன். ஷட்டவுன் ஆனதும் அதை எடுத்து அதற்கான லெதர் கேரி பேகினுள் வைத்தேன். கூடவெ இன்றிரவு பார்க்க வேண்டிய சில ஆஃபீஸ் பைல்களையும் வைத்தேன். என்னுடைய லஞ்ச் BAG ஐயும் எடுத்துக்கொண்டேன். அதை தொடும் போது, மதியம் சாப்பிட்ட சாம்பார் சாதமும், உருளைகிழங்கு வறுவலும் ஞாபகம் வந்தது. அபாரமான ருசி. சாதரணமாகவே என் மனைவி சமையலில் ஒரு கலக்கு கலக்குவாள். இன்று பின்னியெடுத்திருந்தாள்.

நரி

ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்க நிறைய வடையை சுட்டுகிட்டு பக்கத்து ஊருக்கு எடுத்துகிட்டு போய் வித்து வாழ்ந்துகிட்டு இருந்தாங்க. பக்கத்து ஊருக்கு போகிற வழியில ஒரு காடு இருந்தது. அந்த காட்டை தினமும் கடந்துதான் இவங்க பக்கத்து ஊருக்கு போக முடியும். காட்டை கடக்குற வழியில ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதுல இவங்க தினமும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு தான் பக்கத்து ஊருக்கு போவாங்க.

Tsunami..!

ஆண்டவா!

தமிழ்நாட்டை முன்னேற்ற..! - கனவு 2: பரந்து விரிதல்

கல்லூரி படிப்புக்காக நான் சென்னை சென்றவன். படித்து முடித்து விட்டு சென்னையிலே வேலை செய்தேன். அப்போது என்னுடன் தங்கியிருந்த என்னுடைய ரூம் மேட்ஸ், மற்றும் பல நண்பர்கள் அனைவரும் என்னைப் போலவே வெளியூரிலிருந்து வந்தவர்கள் தான். இப்படி வந்தவர்களில் 99% பேர் சென்னையில் செட்டிலாகிவிட்டனர். ஏன்? சென்னையில் தான் வேலை வாய்ப்பு அதிகம்.

தமிழ்நாட்டை முன்னேற்ற..! - கனவு 1: ரோடு

"இந்த ஊழல் பெருச்சாளிங்களால் தான் நம்ப மாநிலம் முன்னேறாம இருக்கு..." "அரசியல்வாதிங்க தான் நாட்டை குட்டி சுவராக்குகிறாங்க.." "ஜனங்க சரியில்லை.."