Posts

சிறுகதை: ஆப்பிள்

சாயந்திர நேரம். நான் என் அலுவலகத்தை விட்டு கிளம்பும் நேரம். லேப்டாப்பை மெதுவாக ஷட்டவுன் பண்ணினேன். ஷட்டவுன் ஆனதும் அதை எடுத்து அதற்கான லெதர் கேரி பேகினுள் வைத்தேன். கூடவெ இன்றிரவு பார்க்க வேண்டிய சில ஆஃபீஸ் பைல்களையும் வைத்தேன். என்னுடைய லஞ்ச் BAG ஐயும் எடுத்துக்கொண்டேன். அதை தொடும் போது, மதியம் சாப்பிட்ட சாம்பார் சாதமும், உருளைகிழங்கு வறுவலும் ஞாபகம் வந்தது. அபாரமான ருசி. சாதரணமாகவே என் மனைவி சமையலில் ஒரு கலக்கு கலக்குவாள். இன்று பின்னியெடுத்திருந்தாள்.

நரி

ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்க நிறைய வடையை சுட்டுகிட்டு பக்கத்து ஊருக்கு எடுத்துகிட்டு போய் வித்து வாழ்ந்துகிட்டு இருந்தாங்க. பக்கத்து ஊருக்கு போகிற வழியில ஒரு காடு இருந்தது. அந்த காட்டை தினமும் கடந்துதான் இவங்க பக்கத்து ஊருக்கு போக முடியும். காட்டை கடக்குற வழியில ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதுல இவங்க தினமும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு தான் பக்கத்து ஊருக்கு போவாங்க.

Tsunami..!

ஆண்டவா!

தமிழ்நாட்டை முன்னேற்ற..! - கனவு 2: பரந்து விரிதல்

கல்லூரி படிப்புக்காக நான் சென்னை சென்றவன். படித்து முடித்து விட்டு சென்னையிலே வேலை செய்தேன். அப்போது என்னுடன் தங்கியிருந்த என்னுடைய ரூம் மேட்ஸ், மற்றும் பல நண்பர்கள் அனைவரும் என்னைப் போலவே வெளியூரிலிருந்து வந்தவர்கள் தான். இப்படி வந்தவர்களில் 99% பேர் சென்னையில் செட்டிலாகிவிட்டனர். ஏன்? சென்னையில் தான் வேலை வாய்ப்பு அதிகம்.

தமிழ்நாட்டை முன்னேற்ற..! - கனவு 1: ரோடு

"இந்த ஊழல் பெருச்சாளிங்களால் தான் நம்ப மாநிலம் முன்னேறாம இருக்கு..." "அரசியல்வாதிங்க தான் நாட்டை குட்டி சுவராக்குகிறாங்க.." "ஜனங்க சரியில்லை.."

நகைச்சுவை: நாட்டு நடப்பு

(In Facebook -  நாட்டு நடப்பு) "பஞ்சாயத்து கூட்டி, தண்டனை தருவதை தடுக்க சட்டம் வருகிறது - செய்தி" முதலாளி பொண்ணை காதலிச்சதுக்காக, நம்ப முனியனை ஏழு நாள் மரத்துல கட்டி வைக்குமாறு பஞ்சாயத்துல தீர்ப்பு சொன்னாங்களே. என்னாச்சு?  தீர்ப்பு சொன்னவங்களை ஏழு வருஷம் ஜெயில்ல போட்டுட்டாங்களாம். ------ 

நகைச்சுவை : பாய்ஸ்

(In Facebook - நகைச்சுவை : பாய்ஸ்) "பாய்ஸ் படம் பார்த்திட்டியா?"  "ம்ம்.. பார்த்தேன்பா. கலக்கிட்டாங்க இல்லே. என்னமா கார் சேஸ்லாம் இருக்கு"  "கார் சேஸா? என்னடா சொல்றே?"