நகைச்சுவை - Election time
In Facebook - Humor - Election time அறிவிப்பாளர் : "அன்புள்ள பெரியோர்களே, தாய்மார்களே, வட இந்தியாவைச் சேர்ந்த நமது தானைத்தலைவர், இவ்வளவு தூரம் வந்து, தமிழ் நாட்டில் நடக்கும் இந்த தொகுதியின் பாராளுமன்ற தேர்தலிலே போட்டியிடுகிறார் என்பது நமக்கெல்லாம் ஒரு இனிய செய்தியாகும். அவருக்கு தமிழ் தெரியாது என்பதால், அவர் ஆங்கிலத்தில் பேசுவார் என்று தெரிவித்துக்கொள்கிறோம். அதை தமிழில் மொழிபெயர்க்க அவருடன் வழக்கமாக வரும் மொழிபெயர்ப்பாளர் இன்று தவிர்க்க இயலாத காரணங்களால் வரவில்லை. ஆதலால் நமது உள்ளூர் இளைஞர் அணியிலே மிக அதிகமாக, எட்டாவது வரை படித்துள்ள மாடசாமி, தலைவரின் பேச்சை தமிழில் மொழிபெயர்ப்பார் என்று தெரிவித்துக்கொள்கிரோம். இப்போது தலைவர் அவர்களை பேச அழைக்கின்றோம்.