Posts

Showing posts with the label நகைச்சுவை

ஏன்யா லேட்டு? - ஒரு உரையாடல்

வாய்யா. ஏன் லேட்டு? லேட்டாயிடுச்சு சார். அது தெரியுது. ஆனா, ஏன்யா லேட்டு? ம்..ம்ம்.. யோவ் என்னாய்யா முணுமுணுன்னு? இன்னைக்கு காலெஜுல என்னோட பீரியட் முத பீரியட்ன்னு தெரியுமில்லே?

நகைச்சுவை: ஜோக்: 'ரொம்ப நல்லவர்பா'

மகள்: அப்பா. நீங்க பார்த்து எனக்கு கட்டிவெச்ச மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்..ப்பா..! அப்பா: அப்படியா? போன வாரம் தானே, ‘அவரு தம் அடிக்கிறாரு, டெய்லி தண்ணியடிச்சிட்டு வர்றார்’னு என் கிட்ட புலம்பினே? மகள்: அதெல்லாம் பரவாயில்லைபா. அதுக்காக அவரை எத்தனை தடவை நான் அடிச்சாலும் தாங்கிக்கிறார்பா. அதனாலதான் சொல்றேன் அவர் ரொம்ப நல்லவர்பா.  By Sampath

நகைச்சுவை: ஜோக்

ஜோக்: ”ச்சே. அந்த தயாரிப்பாளர் ரொம்ப பாவம்பா. என்னதான் இருந்தாலும் அவரோட படம் இவ்வளவு பயங்கரமாக ஃபிளாப் ஆயிருக்க கூடாது” “ஏம்பா என்னாச்சு? விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கிறாங்களா? ” “அட அது மட்டும்னா பரவாயில்லைபா. ஆனா அந்த படத்துக்கு ’திருட்டு வீசிடி பண்ணி பயங்கர நஷ்டம் அதானால எங்களுக்கும் நஷ்ட ஈடு வேணும்னு’ ரெண்டு திருட்டு வீசிடிகாரங்க காவல்துறையில புகார் கொடுத்திருக்காங்களாம்.” By Sampath

நகைச்சுவை: ஜோக்

ஜோக்: ”எந்த ஒரு கூட்டணியும் நம் கட்சியை தங்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை என்ற காரணத்தினாலும், அப்படியே சேர்த்துக்கொள்ள முன்வந்தாலும் நாம் கேட்கிற அளவுக்கு தொகுதியை பங்கு தராத காரணத்தினாலும், இனிமேல் நேரடியாகவே எங்களுக்கு, சட்டசபையில் 33.3 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யுமாறு, மாண்புமிகு கவர்னர் அவர்களை கேட்டுக்கொள்ளுகிறோம்”.

நகைச்சுவை: அட போங்க சார்

ஜோக்: அட போங்க சார். என் பையன் மார்க்கை ரேங்க் மாதிரியும், ரேங்கை மார்க் மாதிரியும் வாங்குறான். என்னத்தை சொல்றது..! இந்த ஜோக்கைப் பற்றி...

நகைச்சுவை: கவுண்டமணி & செந்தில்

கவுண்டமணி: டேய் நியூஸ் படிக்கிறேன். கேளுடா..! நியுயார்க்கில் ‘ஸேண்டி’ புயல். தமிழ் நாட்டில் ‘நீலம்’ புயல். செந்தில்: அண்ணே. எனக்கு ஒரு சந்தேகம்.

நகைச்சுவை: டவுசர்

(In Facebook - டவுசர்) ஏதாவது ஒரு ஃபங்ஷனில் நீங்கள் நோட் பண்ணியிருப்பீர்கள். குறிப்பாக பெண்களிடம் இந்த பழக்கம் உண்டு. அதாவது மற்றவர்கள் நல்ல உடையணிந்து வந்தால் அதை வாய்விட்டு அவர்களிடமே  தன் பாராட்டுகளை தெரிவிப்பது.  கீழ்கண்ட கான்வெர்சேஷன்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.  ‘மாமீ, உங்க சாரீ ரொம்ப அழகா இருக்கு. எங்கே வாங்கினீங்க?’   

நகைச்சுவை - ஓரிரு வரி கதைகள்

அரசியல்வாதிக்கோர் அதிர்ச்சி "இன்று முதல் யாரவது அடையாள உண்ணாவிரதம் இருக்க விரும்பினால், குறைந்தது மூன்று நாளாவது தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல், உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உண்ணாவிரதம் அங்கீகரிக்கப்படும். மேலும் இந்த மூன்று நாட்களில் அவர்களுக்கு எது நேர்ந்தாலும் அரசு பொறுப்பேற்காது. தவிர விரதத்தை பாதியிலே முடித்தால், அவர்களுக்கு சிறைதண்டனை தரப்படும்" - இந்திய அரசு                     ----- *** --------

நகைச்சுவை: விடா & கொடா

(In Facebook - விடா & கொடா) (கல்லூரியில் ஒரு லேக்சரருக்கும், வகுப்புக்கு லேட்டாக வரும் ஒரு மாணவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்) 'வாய்யா. வகுப்புக்கு வர்ற நேரமா இது? ஏன் லேட்டு?' 'லேட்டாயிடுச்சி சார்' 

நகைச்சுவை: மன்னர் ராஜமன்னார்

(In Facebook - மன்னர் ராஜமன்னார்) மந்திரி: மன்னா. பக்கத்து நாட்டு பேரரசர் நம்பளை கப்பம் தான் கட்ட சொன்னாரே தவிர கப்பலெல்லாம் கட்ட சொல்லலை. எதுக்கும் பயப்படாம இன்னொரு தடவை தைரியமா கேட்டு சரி பாத்துடுங்க! ----0---- 

நகைச்சுவை - ஏழாம் அறிவு

(In Facebook - ஏழாம் அறிவு) கணேஷ்: சுபா, ஜெனெடிக் ஆப்ரேஷன் மூலமா போதி தர்மாவுடைய திறமைகளை கொண்டு வர அரவிந்துக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தோமே. அதுல ஒரு சின்ன தப்பு நடந்திடுச்சு.  

நகைச்சுவை: ஒரு வேளை இப்படி நடந்திருந்தா..!

(In Facebook - ஒரு வேளை இப்படி நடந்திருந்தா..!) கட்டபொம்மன்: மாமனா, மச்சானா, மானங்கெட்டவனே ஜாக்ஸன் துரை: என்ன பாஸ். இதுக்குப் போய் ரொம்ப எமோஷனலாயிகிட்டு? வரி கட்ட இஷ்டமில்லேன்னா இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே. அதை விட்டுடுட்டு ஏன் பாஸ் இப்படி திட்டுறீங்க. போங்க பாஸ். போய் ஆவுற வேலையை பாருங்க. கோச்சுக்காதீங்க. கட்டபொம்மன்: ..??.. ----------------------

நகைச்சுவை: பொழுது போகலைன்னா ஃபோன்ல...

(In Facebook - பொழுது போகலைன்னா ஃபோன்ல...) (பொழுது போகலைன்னா ஃபோன்ல இப்படி எல்லாம் பேசலாமுங்களா? - ஒரு கற்பனை) "ஹலோ. என்ன இன்னும் யாரும் கல்யாணத்துக்காக ஊருக்கு கிளம்பளையா? சீக்கிரம் எல்லோரும் கிளம்புங்க சார். அப்புறம் பஸ்ஸை மிஸ் பண்ணிடப்போறீங்க.  "தோ கிளம்பிட்டோம். ஆமாம், நீங்க யாரு சார் பேசறது?  "நான் இந்த ஏரியா திருடன் சார்"  -----------------------

நகைச்சுவை: சிவாஜி - விடுபட்ட காட்சிகள்

(In Facebook - சிவாஜி - விடுபட்ட காட்சிகள்) சூப்பர் ஸ்டாரின் சிவாஜி படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் வரும் ஒவ்வொரு காட்சியையும் அதிரடியாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்திருப்பார் இயக்குனர் ஷங்கர். இருந்தாலும் சிவாஜியின் வாழ்க்கையில் அவை மட்டுமா நடந்திருக்கும்? காலையில் பால்காரன் சிவாஜியின் வீட்டில் பால் போடுவதிலிருந்து தொடங்கி இன்னும் பல சாதாரண விஷயங்கள் நடந்திருக்கும். அவைகளெல்லாம் சேர்த்தால் படத்தின் விறுவிறுப்பு குறைந்து விடும் என்று இயக்குனர் விட்டுவிட்டிருப்பார். 

நகைச்சுவை: கோடம்பாக்கம் கல்வி நிலையம்

(In Facebook - கோடம்பாக்கம் கல்வி நிலையம்) தனது அறையில் மும்முறமாக வேலை செய்து கொண்டிருந்த சி.கணேசன் அவர்கள், ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்து நுழைவாசலை பார்த்தார். அங்கு ஜெ.கணேசன் நின்று கொண்டிருந்தார்.  "பிரின்ஸிபாலை பார்க்கனும்" என்று வாசலில் இருந்த உதவியாளரிடம் அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது...  

நகைச்சுவை: நாட்டு நடப்பு

(In Facebook -  நாட்டு நடப்பு) "பஞ்சாயத்து கூட்டி, தண்டனை தருவதை தடுக்க சட்டம் வருகிறது - செய்தி" முதலாளி பொண்ணை காதலிச்சதுக்காக, நம்ப முனியனை ஏழு நாள் மரத்துல கட்டி வைக்குமாறு பஞ்சாயத்துல தீர்ப்பு சொன்னாங்களே. என்னாச்சு?  தீர்ப்பு சொன்னவங்களை ஏழு வருஷம் ஜெயில்ல போட்டுட்டாங்களாம். ------ 

நகைச்சுவை : பாய்ஸ்

(In Facebook - நகைச்சுவை : பாய்ஸ்) "பாய்ஸ் படம் பார்த்திட்டியா?"  "ம்ம்.. பார்த்தேன்பா. கலக்கிட்டாங்க இல்லே. என்னமா கார் சேஸ்லாம் இருக்கு"  "கார் சேஸா? என்னடா சொல்றே?"  

நகைச்சுவை - ஜோக்ஸ்

In Facebook - Jokes  "அவர் சினிமாவுல பாட்டெழுதி பெரிய கவிப்பேரரசுவாக ஆசைப்பட்டார். ஆனா அது முடியாததால குடிகாரனா மாறிட்டாரு" "அப்ப கவி'பீர்'ரரசுவா ஆகிட்டாருன்னு சொல்லுங்க" ------------------------------------------------------------------------------------------

நகைச்சுவை - Election time

In Facebook - Humor - Election time அறிவிப்பாளர் : "அன்புள்ள பெரியோர்களே, தாய்மார்களே, வட இந்தியாவைச் சேர்ந்த நமது தானைத்தலைவர், இவ்வளவு தூரம் வந்து, தமிழ் நாட்டில் நடக்கும் இந்த தொகுதியின் பாராளுமன்ற தேர்தலிலே போட்டியிடுகிறார் என்பது நமக்கெல்லாம் ஒரு இனிய செய்தியாகும். அவருக்கு தமிழ் தெரியாது என்பதால், அவர் ஆங்கிலத்தில் பேசுவார் என்று தெரிவித்துக்கொள்கிறோம். அதை தமிழில் மொழிபெயர்க்க அவருடன் வழக்கமாக வரும் மொழிபெயர்ப்பாளர் இன்று தவிர்க்க இயலாத காரணங்களால் வரவில்லை. ஆதலால் நமது உள்ளூர் இளைஞர் அணியிலே மிக அதிகமாக, எட்டாவது வரை படித்துள்ள மாடசாமி, தலைவரின் பேச்சை தமிழில் மொழிபெயர்ப்பார் என்று தெரிவித்துக்கொள்கிரோம். இப்போது தலைவர் அவர்களை பேச அழைக்கின்றோம்.