Posts

Showing posts with the label சிறுகதை

ஏன்யா லேட்டு? - ஒரு உரையாடல்

வாய்யா. ஏன் லேட்டு? லேட்டாயிடுச்சு சார். அது தெரியுது. ஆனா, ஏன்யா லேட்டு? ம்..ம்ம்.. யோவ் என்னாய்யா முணுமுணுன்னு? இன்னைக்கு காலெஜுல என்னோட பீரியட் முத பீரியட்ன்னு தெரியுமில்லே?

மினி தொடர் - வாக்கம் வடிவேலு - 1

என் பேரு வாக்கம் வடிவேலுங்க.   நான் ஒரு திருட்டுப்பயலுங்க. திருட்டுபயல்ன்னா என்னிய எளக்காரமா நினைச்சிடாதீங்க. இதுவும் ஒரு கஷ்டமான வேலைங்க. எவ்வளவு பிளான் பண்ணனும் தெரியுமா. உங்களை மாதிரி பகல் ஷிஃஃப்ட்டெல்லாம் எங்களுக்கு கிடையாதுங்க. எல்லாம் நைட் ஷிஃப்ட்தான்.  

சிறுகதை: சில்லரை இல்லீங்க

(In Facebook - சில்லரை இல்லீங்க) அது ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணி... லக்‌ஷணா தனது கிச்சனில் பிஸியாக இருந்தாள். அந்த அப்பார்ட்மெண்ட் காம்பவுண்டில் முதல் மாடியில் உள்ளது அவள் ஃபிளாட்.     எங்கே இன்னும் அவரைக் காணோம் என்று ஜன்னல் வழியாக பார்த்தாள். கரெக்டாக சொல்லிவைத்தது போல், அப்போதுதான் தனது பைக்கில் அப்பார்ட்மெண்ட் காம்பவுண்ட் உள்ளே நுழைந்த சந்தானம் அதை தனது ஃபிளாட் அருகினில் பார்க் செய்தான். சந்தானம்..லக்‌ஷணாவின் கணவன்.  

சிறுகதை: தண்டனை

(In Facebook - தண்டனை) ஒரு மன்னர் இருந்தார். அவருக்கு சட்டம் ஒழுங்கு மிகவும் முக்கியம். அதனாலே தனக்கு அறிவுரை கூற நிறைய மந்திரிகளை நியமித்திருந்தார். அவர்களில் தலைச்சிறந்த ஒரு அறிவாளியை முதன்மந்திரியாக நியமித்திருந்தார்.  ஒரு நாள் சபையினில்....  

சிறுகதை: கஷ்டமர்

(In Facebook - கஷ்டமர்) ‘ஹலோ. இது என்ன மெனு கார்டு. நல்லாவே இல்லை. இந்த ஏரியாவுலே பெரிய பாஷ் ரெஸ்டாரெண்டுன்னு சொன்னாங்க. ஆனா மெனு கார்டுலேயே உங்க லட்சணம் தெரியுது. உங்க மேனேஜரை கூப்பிடுங்க’ என்று சர்வரிடம் சொன்னாள் ஸ்வர்யா. டை கட்டிக்கொண்டு, ரொம்பவே டிப்டாப் ஆக இருந்த அந்த சர்வர் (அவன் இளைஞன் என்பதால் சர்வன் என்று சொல்லலாமோ?) சற்று திணறித்தான் போனான்.  

நகைச்சுவை - ஓரிரு வரி கதைகள்

அரசியல்வாதிக்கோர் அதிர்ச்சி "இன்று முதல் யாரவது அடையாள உண்ணாவிரதம் இருக்க விரும்பினால், குறைந்தது மூன்று நாளாவது தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல், உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உண்ணாவிரதம் அங்கீகரிக்கப்படும். மேலும் இந்த மூன்று நாட்களில் அவர்களுக்கு எது நேர்ந்தாலும் அரசு பொறுப்பேற்காது. தவிர விரதத்தை பாதியிலே முடித்தால், அவர்களுக்கு சிறைதண்டனை தரப்படும்" - இந்திய அரசு                     ----- *** --------

சிறுகதை: ஒரு சிறு காதல் கதை

(In Facebook - ஒரு சிறு காதல் கதை) நீ..! பூ..! 

சிறுகதை: ஒரு நிமிட கதை - வரதட்சிணை ஒழிப்பு

(In Facebook - ஒரு நிமிட கதை - வரதட்சிணை ஒழிப்பு) "அப்புறம் பொண்ணுக்கு வரதட்சிணையா எவ்வளவு போடுவீங்க?" என்று கேட்டார் மாப்பிள்ளையின் தாய். "ஆங். அதுவாங்க! ஏதோ எங்க சக்திக்கு ஏற்ப இருபத்தைந்து பவுன் போடறோம்" என்று தலையை சொறிந்தார் பெண்ணின் அப்பா. 

சிறுகதை: ஒரு நிமிட கதை - ரிப்பேர்

(In Facebook - ஒரு நிமிட கதை - ரிப்பேர்) ஹலோ. கம்ப்யூட்டர் கம்பெனிங்களா? எங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆயிடுத்து. உங்க இஞ்சினியரை அனுப்ப முடியுமா?' 'ஓ! கண்டிப்பா சார். அதுக்கு முன்னாடி உங்க கம்ப்யூட்டர் எப்படி ரிப்பேர் ஆச்சு? அதை முதல்ல சொல்லுங்க" 

சிறுகதை: தகுதி

(In Facebook - சிறுகதை : தகுதி) எம்.எல்.ஏ பாண்டுரங்கன் தான் புதிதாக ஆரம்பித்த பொறியியல் கல்லூரியில், தன்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். தன் கையில் இருந்த பயோடேட்டாவையும், தன் எதிரில் அமர்ந்திருக்கும் அந்த பயோடேட்டாவுக்கு சொந்தக்காரரையும் மாறிமாறி பார்த்தார். பிரின்சிபால் வேலைக்கு நேர்முகத் தேர்வு நடத்திக்கொண்டிருக்கிறார். 

சிறுகதை: பாட்டுத்தலைவன் பாடினால்..!

(In Facebook - பாட்டுத்தலைவன் பாடினால்..!) சனிக்கிழமை காலை எட்டரை மணி. வீடே முழித்திருந்தாலும் பொறுமையாக எழுந்து, மிகப்பொறுமையாக பல்துலக்கி விட்டு அப்புறம் மனைவி கையால காபி வாங்கி குடிப்பது சூப்பர்ங்க. ஆனா அதை விட சூப்பரா இன்னொரு விஷயம் இருக்குங்க.   அதாவது, அந்தக் காபியெல்லாம் குடிச்ச பிறகு, குளிக்கிறதுக்கு டவலை எடுத்துக்கிட்டு, பாத்ரூம் போய் ஷவருக்கு கீழ நின்னுக்கிட்டு, சும்மா ஜில்லுன்னு தண்ணியை தொறந்து விட்டா, தண்ணி மட்டுமா பொத்துக்கினு வரும்? கூடவே என்னோட இசைஞானமும் பிச்சிக்கிட்டு வரும்..பாருங்க..ச்சே..பேரானந்தம்ங்க.  

சிறுகதை: என் மாணவன்

(In Facebook - என் மாணவன்) ஃபிலடெல்பியா, யு.எஸ்.ஏ. சனிக்கிழமை காலை. அமைதியாக ரிக்லைனர் சோஃபாவில் காலை நீட்டி அமர்ந்துக்கொண்டு ’சேனல்லைவ் டாட் டீவி’ மூலமாக தொலைக்காட்சியில் சன் டீவி பார்த்துக் கொண்டிருந்தேன். எதிரே என் பேரக்குழந்தைகள் தரையில், இல்லை, கார்ப்பெட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

சிறுகதை : திடுக்கிடாத திருப்பம்

(In Facebook - சிறுகதை : திடுக்கிடாத திருப்பம்) ரமேஷ் ரொம்ப ஹாப்பி. காலையில் தான் நிச்சயதார்த்தம் பண்ணி முடிச்சிருந்தான். அதுவும் அவன் ரொம்ப நாளா ஆசை பட்ட சஞ்சுளாவைத்தான்.சுருக்கமா சொன்னா, ‘இனிமே இவ உனக்குதாம்பா. கூடிய சீக்கிரமே இவளை மிஸஸ் சஞ்சுளா ரமேஷ் ன்னு மாத்த நாங்க உறுதியளிக்கிறோம்’னு சொல்லி இவங்க வீட்டு பெரிசுங்களும் அவங்க வீட்டு பெரிசுங்களும் நிச்சயம் பண்ண, ரமேஷ் வாஸ் இன் ட்ரீம்ஸ் யா. ‘மிஸஸ் சஞ்சுளா ரமேஷ்’! நினைத்துப் பார்க்கவே ’ஹனி’த்தது. நிச்சயம் செஞ்சு வைச்ச அப்பாவுக்கு தேங்க்ஸ். மனசில் நூறு முறை சொல்லிக்கொண்டிருந்தான்.

சிறுகதை : வரதட்சிணை

(In Facebook - சிறுகதை : வரதட்சிணை) சோபாவில் ஜம்பமாக சாய்ந்துகொண்டு உட்கார்ந்துகொண்டிருந்தாள் அந்த பெண்மணி. மாப்பிள்ளையின் தாய் என்பதால் ஒரு பெருமிதம். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் அவள் கணவர். 'கெக்க பிக்க' என்று சிரித்துக்கொண்டே, தட்டில் இருந்த பஜ்ஜிகளை காலி பண்ணிக்கொண்டிருந்தார். மாப்பிள்ளையும் கம்பீரமாக முகத்தை தூக்கிகொண்டு உட்கார்ந்திருந்தார். கவர்ன்மெண்ட் வேலையில் இருப்பவர் ஆயிற்றே.

சிறுகதை : பொய் மான்

(In Facebook : சிறுகதை : பொய் மான்) 'தாத்தா!' என்று ஓடி வந்த பேத்தி ராகவியை அணைத்துக்கொண்டு உச்சிமுகர்ந்தார் பெரியவர் சிங்கமுத்து. அந்த கிராமத்திலே இருக்கும் வீடுகளிலே மிகப்பெரிய வீடானா ஜமீன் மாளிகைக்கு சொந்தக்காரர் அவர். அதில் தன் மனைவி ராஜேஸ்வரி, மகள், மருமகன் மற்றும் பேத்தியுடன் வாழ்ந்து வருகிறார்.

சிறுகதை : விசா

நாதன் அமர்ந்திருந்த பஸ் மெதுவாக மேம்பாலத்தில் ஏறியது. அவன் இறங்க வேண்டிய இடம் சற்று நேரத்தில் வந்துவிடும். தன்னுடைய செல்·போனை எடுத்து பார்த்தான். காலை 5:45 மணி என்று காட்டியது. அவன் முகத்தில் ஒரு மெல்லிய கவலை ரேகை வந்து போனது.

சிறுகதை : காக்கா.. பாட்டி.. வடை.. நரி..

(In Facebook - காக்கா.. பாட்டி.. வடை.. நரி..) ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்க தினமும் நூறு வடையை சுட்டுகிட்டு பக்கத்து ஊருக்கு எடுத்துக் கொண்டு போய் வித்து, வாழ்ந்துகிட்டு இருந்தாங்க. பக்கத்து ஊருக்கு போகிற வழியில ஒரு காடு இருந்தது. அந்த காட்டை தினமும் கடந்துதான் இவங்க பக்கத்து ஊருக்கு போக முடியும். காட்டை கடக்குற வழியில ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதுல இவங்க தினமும் கொஞ்ச நேரம் தூங்கிட்டுதான் பக்கத்து ஊருக்கு போவாங்க.

சிறுகதை : சாமியார்

அப்பப்பா! ரொம்ப கூட்டமா இருக்கு? இப்ப யாராவது உள்ளே போகமுடியும்னு நினைக்கிறீங்க? தெரியலீங்க. நான் இதுவரைக்கும் உள்ளே போகனும்னு முயற்சி பண்ணதில்லை. அதனால எனக்கு தெரியாது. அட என்னாங்க. அப்ப நீங்க சாமியாரை பார்க்க வரலியா? இல்லீங்க. அப்ப எதுக்கு இங்க வந்து உக்காந்திருக்கீங்க? எங்க வந்து உட்கார்ந்திருக்கேன்?

சப்-இன்ஸ்பெக்டர் சந்தானத்தின் கடிதங்கள் - கடிதம் 1

அன்புள்ள காவல்துறை தலைவருக்கு, தங்களிடம் உண்மையான பணிவும், மரியாதையும் வைத்திருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் எழுதிக்கொள்வது. இங்கு எனது ஸ்டேஷனில் இருக்கும் அனைத்து காவலர்களும், ஸ்டேஷன் ஜெயிலில் இருக்கும் அனைத்து கைதிகளும் நலம். அதுபோல தங்களின் நலனையும், தங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காவலர்கள் மற்றும் சென்டிரல் ஜெயில் கைதிகளின் நலனையும் அறிய ஆவல்.

சிறுகதை: ஆப்பிள்

சாயந்திர நேரம். நான் என் அலுவலகத்தை விட்டு கிளம்பும் நேரம். லேப்டாப்பை மெதுவாக ஷட்டவுன் பண்ணினேன். ஷட்டவுன் ஆனதும் அதை எடுத்து அதற்கான லெதர் கேரி பேகினுள் வைத்தேன். கூடவெ இன்றிரவு பார்க்க வேண்டிய சில ஆஃபீஸ் பைல்களையும் வைத்தேன். என்னுடைய லஞ்ச் BAG ஐயும் எடுத்துக்கொண்டேன். அதை தொடும் போது, மதியம் சாப்பிட்ட சாம்பார் சாதமும், உருளைகிழங்கு வறுவலும் ஞாபகம் வந்தது. அபாரமான ருசி. சாதரணமாகவே என் மனைவி சமையலில் ஒரு கலக்கு கலக்குவாள். இன்று பின்னியெடுத்திருந்தாள்.