Posts

Showing posts from 2014

நகைச்சுவை: ஜோக்: 'ரொம்ப நல்லவர்பா'

மகள்: அப்பா. நீங்க பார்த்து எனக்கு கட்டிவெச்ச மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்..ப்பா..! அப்பா: அப்படியா? போன வாரம் தானே, ‘அவரு தம் அடிக்கிறாரு, டெய்லி தண்ணியடிச்சிட்டு வர்றார்’னு என் கிட்ட புலம்பினே? மகள்: அதெல்லாம் பரவாயில்லைபா. அதுக்காக அவரை எத்தனை தடவை நான் அடிச்சாலும் தாங்கிக்கிறார்பா. அதனாலதான் சொல்றேன் அவர் ரொம்ப நல்லவர்பா.  By Sampath

Karaoke - நான் போகிறேன் மேலே மேலெ from நாணயம்

நான் போகிறேன் மேலே மேலே Karaoke: Male Voice - Sampath Rest is from the original track.

நகைச்சுவை: ஜோக்

ஜோக்: ”ச்சே. அந்த தயாரிப்பாளர் ரொம்ப பாவம்பா. என்னதான் இருந்தாலும் அவரோட படம் இவ்வளவு பயங்கரமாக ஃபிளாப் ஆயிருக்க கூடாது” “ஏம்பா என்னாச்சு? விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கிறாங்களா? ” “அட அது மட்டும்னா பரவாயில்லைபா. ஆனா அந்த படத்துக்கு ’திருட்டு வீசிடி பண்ணி பயங்கர நஷ்டம் அதானால எங்களுக்கும் நஷ்ட ஈடு வேணும்னு’ ரெண்டு திருட்டு வீசிடிகாரங்க காவல்துறையில புகார் கொடுத்திருக்காங்களாம்.” By Sampath

மினி தொடர் - வாக்கம் வடிவேலு - 1

என் பேரு வாக்கம் வடிவேலுங்க.   நான் ஒரு திருட்டுப்பயலுங்க. திருட்டுபயல்ன்னா என்னிய எளக்காரமா நினைச்சிடாதீங்க. இதுவும் ஒரு கஷ்டமான வேலைங்க. எவ்வளவு பிளான் பண்ணனும் தெரியுமா. உங்களை மாதிரி பகல் ஷிஃஃப்ட்டெல்லாம் எங்களுக்கு கிடையாதுங்க. எல்லாம் நைட் ஷிஃப்ட்தான்.