Posts

Showing posts from 2013

நகைச்சுவை: ஜோக்

ஜோக்: ”எந்த ஒரு கூட்டணியும் நம் கட்சியை தங்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை என்ற காரணத்தினாலும், அப்படியே சேர்த்துக்கொள்ள முன்வந்தாலும் நாம் கேட்கிற அளவுக்கு தொகுதியை பங்கு தராத காரணத்தினாலும், இனிமேல் நேரடியாகவே எங்களுக்கு, சட்டசபையில் 33.3 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யுமாறு, மாண்புமிகு கவர்னர் அவர்களை கேட்டுக்கொள்ளுகிறோம்”.

நகைச்சுவை: அட போங்க சார்

ஜோக்: அட போங்க சார். என் பையன் மார்க்கை ரேங்க் மாதிரியும், ரேங்கை மார்க் மாதிரியும் வாங்குறான். என்னத்தை சொல்றது..! இந்த ஜோக்கைப் பற்றி...

சிறுகதை: சில்லரை இல்லீங்க

(In Facebook - சில்லரை இல்லீங்க) அது ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணி... லக்‌ஷணா தனது கிச்சனில் பிஸியாக இருந்தாள். அந்த அப்பார்ட்மெண்ட் காம்பவுண்டில் முதல் மாடியில் உள்ளது அவள் ஃபிளாட்.     எங்கே இன்னும் அவரைக் காணோம் என்று ஜன்னல் வழியாக பார்த்தாள். கரெக்டாக சொல்லிவைத்தது போல், அப்போதுதான் தனது பைக்கில் அப்பார்ட்மெண்ட் காம்பவுண்ட் உள்ளே நுழைந்த சந்தானம் அதை தனது ஃபிளாட் அருகினில் பார்க் செய்தான். சந்தானம்..லக்‌ஷணாவின் கணவன்.