கவிதை: ஒரு ஆணுக்கு அட்வைஸ்
அன்பு வேண்டுமா
ஒரு தாய்க்கு மகனாக இருந்துப்பார்
அறிவு வேண்டுமா
ஒரு தந்தைக்கு மகனாக இருந்துப்பார்
சிணுங்கல் வேண்டுமா
ஒரு தங்கைக்கு அண்ணனாக இருந்துப்பார்
துணிவு வேண்டுமா
ஒரு தம்பிக்கு அண்ணனாக இருந்துப்பார்
பாசம் வேண்டுமா
ஒரு அக்காளுக்கு தம்பியாக இருந்துப்பார்
நல் வழிகாட்டல் வேண்டுமா
ஒரு அண்ணனுக்கு தம்பியாக இருந்துப்பார்
பலம் வேண்டுமா
பலருக்கு நண்பனாக இருந்துப்பார்
துணை வேண்டுமா
ஒரு பெண்ணுக்கு கணவனாய் இருந்துப்பார்
இவை அனைத்தும் வேண்டுமா
ஒரு பெண்ணுக்கு அப்பனாக இருந்துப்பார்
Comments
Post a Comment