சிறுகதை: ஒரு நிமிட கதை - ரிப்பேர்


ஹலோ. கம்ப்யூட்டர் கம்பெனிங்களா? எங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆயிடுத்து. உங்க இஞ்சினியரை அனுப்ப முடியுமா?'


'ஓ! கண்டிப்பா சார். அதுக்கு முன்னாடி உங்க கம்ப்யூட்டர் எப்படி ரிப்பேர் ஆச்சு? அதை முதல்ல சொல்லுங்க" 
 'அதுவா சார். அதுமேல கொஞ்சம் காபி சிந்திடுச்சு'


'ஓ! அதனால ரிப்பேர் ஆயிடுச்சா சார்?'


'இல்லை சார். அதுக்கப்புறமும் ஒழுங்காத்தான் ஓடிச்சு"


"அப்புறம் எப்படி சார் ரிப்பேர் ஆச்சு?"


"காபி சிந்தினதால நல்லா தண்ணி ஊத்தி கழுவினோம். அதுக்கப்புறம் தான் இப்படி ஆச்சு சார்"


"???"---


By
Sampath

Comments