நகைச்சுவை: ஒரு வேளை இப்படி நடந்திருந்தா..!
கட்டபொம்மன்: மாமனா, மச்சானா, மானங்கெட்டவனே
ஜாக்ஸன் துரை: என்ன பாஸ். இதுக்குப் போய் ரொம்ப எமோஷனலாயிகிட்டு? வரி கட்ட இஷ்டமில்லேன்னா இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே. அதை விட்டுடுட்டு ஏன் பாஸ் இப்படி திட்டுறீங்க. போங்க பாஸ். போய் ஆவுற வேலையை பாருங்க. கோச்சுக்காதீங்க.
கட்டபொம்மன்: ..??..
----------------------
மன்னர் ஏன் சொட்ட சொட்ட ஈரமா நடுங்கிகிட்டு உட்கார்ந்திருக்கிறாரு?
அரண்மனையை சுத்தி வாக்கிங் போனவரு ஏதொ நினைப்புல ஸ்விம்மிங் பூல்ன்னு நினைச்சு முதலைங்க இருக்கிற அகழியில குதிச்சிட்டாராம்
--------------------------
Comments
Post a Comment