Posts

Showing posts from April, 2011

சிறுகதை : திடுக்கிடாத திருப்பம்

(In Facebook - சிறுகதை : திடுக்கிடாத திருப்பம்) ரமேஷ் ரொம்ப ஹாப்பி. காலையில் தான் நிச்சயதார்த்தம் பண்ணி முடிச்சிருந்தான். அதுவும் அவன் ரொம்ப நாளா ஆசை பட்ட சஞ்சுளாவைத்தான்.சுருக்கமா சொன்னா, ‘இனிமே இவ உனக்குதாம்பா. கூடிய சீக்கிரமே இவளை மிஸஸ் சஞ்சுளா ரமேஷ் ன்னு மாத்த நாங்க உறுதியளிக்கிறோம்’னு சொல்லி இவங்க வீட்டு பெரிசுங்களும் அவங்க வீட்டு பெரிசுங்களும் நிச்சயம் பண்ண, ரமேஷ் வாஸ் இன் ட்ரீம்ஸ் யா. ‘மிஸஸ் சஞ்சுளா ரமேஷ்’! நினைத்துப் பார்க்கவே ’ஹனி’த்தது. நிச்சயம் செஞ்சு வைச்ச அப்பாவுக்கு தேங்க்ஸ். மனசில் நூறு முறை சொல்லிக்கொண்டிருந்தான்.

சிறுகதை : வரதட்சிணை

(In Facebook - சிறுகதை : வரதட்சிணை) சோபாவில் ஜம்பமாக சாய்ந்துகொண்டு உட்கார்ந்துகொண்டிருந்தாள் அந்த பெண்மணி. மாப்பிள்ளையின் தாய் என்பதால் ஒரு பெருமிதம். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் அவள் கணவர். 'கெக்க பிக்க' என்று சிரித்துக்கொண்டே, தட்டில் இருந்த பஜ்ஜிகளை காலி பண்ணிக்கொண்டிருந்தார். மாப்பிள்ளையும் கம்பீரமாக முகத்தை தூக்கிகொண்டு உட்கார்ந்திருந்தார். கவர்ன்மெண்ட் வேலையில் இருப்பவர் ஆயிற்றே.

சிறுகதை : பொய் மான்

(In Facebook : சிறுகதை : பொய் மான்) 'தாத்தா!' என்று ஓடி வந்த பேத்தி ராகவியை அணைத்துக்கொண்டு உச்சிமுகர்ந்தார் பெரியவர் சிங்கமுத்து. அந்த கிராமத்திலே இருக்கும் வீடுகளிலே மிகப்பெரிய வீடானா ஜமீன் மாளிகைக்கு சொந்தக்காரர் அவர். அதில் தன் மனைவி ராஜேஸ்வரி, மகள், மருமகன் மற்றும் பேத்தியுடன் வாழ்ந்து வருகிறார்.

சிறுகதை : விசா

நாதன் அமர்ந்திருந்த பஸ் மெதுவாக மேம்பாலத்தில் ஏறியது. அவன் இறங்க வேண்டிய இடம் சற்று நேரத்தில் வந்துவிடும். தன்னுடைய செல்·போனை எடுத்து பார்த்தான். காலை 5:45 மணி என்று காட்டியது. அவன் முகத்தில் ஒரு மெல்லிய கவலை ரேகை வந்து போனது.

சிறுகதை : காக்கா.. பாட்டி.. வடை.. நரி..

(In Facebook - காக்கா.. பாட்டி.. வடை.. நரி..) ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்க தினமும் நூறு வடையை சுட்டுகிட்டு பக்கத்து ஊருக்கு எடுத்துக் கொண்டு போய் வித்து, வாழ்ந்துகிட்டு இருந்தாங்க. பக்கத்து ஊருக்கு போகிற வழியில ஒரு காடு இருந்தது. அந்த காட்டை தினமும் கடந்துதான் இவங்க பக்கத்து ஊருக்கு போக முடியும். காட்டை கடக்குற வழியில ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதுல இவங்க தினமும் கொஞ்ச நேரம் தூங்கிட்டுதான் பக்கத்து ஊருக்கு போவாங்க.