தூய தமிழ்

தூய தமிழ் பேசுபவர்களை கிண்டலடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே சமயத்தில் தூய தமிழில் தான் பேச வேண்டும் என்று அடம் பிடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

என்னைக் கேட்டால் தமிழ் அகராதியை இரண்டாக பிரிக்கலாம் என்று சொல்லுவேன். 'சங்க தமிழ்' மற்றும் 'வளர் தமிழ்'.
தூய தமிழை நேசிப்பவர்களிடம் சங்கத் தமிழை ஒப்படைக்கலாம். பேச்சு தமிழை உபயோகிக்கிறவர்களிடம் வளர் தமிழை ஒப்படைக்கலாம்.

இந்த வளர் தமிழ் என்பது வளைந்து கொடுத்து வளரும் தமிழாக இருக்க வேண்டும். அதாவது நாம் அன்றாடம் பயன் படுத்தும் பிற மொழி வார்த்தைகள் அப்படியே தமிழ் படுத்தப்பட்டு, இந்த வளர் தமிழில் சேர வேண்டும்.

உதாரணத்துக்கு, பஸ், கார், ஏரோப்ளேன் போன்ற வார்த்தைகள் வளர் தமிழ் வார்த்தைகளாக அங்கிகரிக்க பட வேண்டும். சங்க தமிழாளர்கள், இதனையே தூய தமிழ் படுத்தி, பேருந்து, மகிழ்வுந்து, விமானம் என்று அழைக்கட்டும்.

ஆனால் ஒரு மனிதன் சங்க தமிழ் பேசுவதா இல்லை வளர் தமிழ் பேசுவதா என்பது அவன் முடிவாக இருக்கட்டும்.

சரி கடைசியாக ஓரிரு தூய தமிழ் வாக்கியங்கள்:
"நான் அலுவலகத்தை விட்டு வரும் பொழுது என் மகிழ்வுந்து பாதி வழியிலே நின்று விட்டது. ஆதலால் நான் இறங்கி நின்று பேருந்து ஏதாவது வருமா என்று காத்திருந்தேன். ஆனால் அவ்வழியே ஒரு துள்ளுந்து வந்தது. கையை காட்டி அதில் ஏறிக்கொண்டேன். அந்த துள்ளுந்தில் ஒரு குறுந்தகடோட்டி ஓடிக்கொண்டு இருந்தது. அதில் பாடல்களை கேட்டு கொண்டு வீடு போய் சேர்ந்தேன்"

மேலே சொன்னது யாருக்கவது சரியாக புரிந்ததா? புரிந்தால் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்.

"நான் அலுவலகத்தை விட்டு வரும் பொழுது என் மகிழ்வுந்து (CAR) பாதி வழியிலே நின்று விட்டது. ஆதலால் நான் இறங்கி நின்று பேருந்து ஏதாவது வருமா என்று காத்திருந்தேன். ஆனால் அவ்வழியே ஒரு துள்ளுந்து (JEEP) வந்தது. கையை காட்டி அதில் ஏறிக்கொண்டேன். அந்த துள்ளுந்தில் ஒரு குறுந்தகடோட்டி (CD PLAYER) ஓடிக்கொண்டு இருந்தது. அதில் பாடல்களை கேட்டு கொண்டு வீடு போய் சேர்ந்தேன்"

Comments

  1. Anonymous12:57 PM

    I am scratching my head. What is 'thullundhu'?

    ReplyDelete
  2. Thullundhu = Jeep

    Sam

    ReplyDelete
  3. Anonymous1:40 PM

    துள்ளுந்து = scooter

    http://geocities.com/tamildictionary
    நவீன தமிழ் அருஞ்சொற்பொருள்

    ReplyDelete
  4. Anonymous7:36 AM

    http://geocities.com/tamildictionary/mathematics - MATHS GLOSSARY
    y/physics - PHYSICS GLOSSARY
    y/automobile - AUTOMOBILE GLOSSARY
    y/aviation - AVIATION GLOSSARY
    y/herbs - HERBAL GLOSSARY
    y/fruits - FRUITS GLOSSARY
    y/vegetables - VEGETABLES GLOSSARY
    y/finance - FINANCE GLOSSARY

    ReplyDelete
  5. Anonymous12:55 AM

    அன்புடன் சாமுக்கு வணக்கம். தங்கள் திட்டம் அருமையான திட்டம். சங்கத் தமிழ் வளர்தமிழ் என இரண்டாகப் பிரிப்பது. அப்பொழுது மக்களையும் இரண்டு பிரிவாகப் பிரித்துவிடலாம். சங்கத் தமிழ் பேசுபவர்கள் நிகழ்தமிழ் பேசுபவர்கள் நாட்டை இரண்டாகப் பிரித்து இரண்டு குடியிருப்புகள் என இரண்டு இரண்டாகப் போய்விடும். சொற்களைத் தமிழ்ப்படுத்தி அதை மட்டும் புழக்கத்தில் விடுவதே சிறந்தது.

    jeep என்பதற்கு மலையுந்து என்ற சொல் நீண்ட காலத்திற்கு முன்பே உள்ளது. பேருந்து இன்று புழக்கத்திற்கு வந்து விட்டது. மிதிவண்டி பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. பேருந்து நிலையம் பயன்பாட்டில் இருக்கின்றதே.

    தாய்மொழியில் மட்டும் படிக்கும் சப்பான் முன்னேறவில்லையா.

    ReplyDelete

Post a Comment