சிறுகதை: ஆப்பிள்
சாயந்திர நேரம். நான் என் அலுவலகத்தை விட்டு கிளம்பும் நேரம். லேப்டாப்பை மெதுவாக ஷட்டவுன் பண்ணினேன். ஷட்டவுன் ஆனதும் அதை எடுத்து அதற்கான லெதர் கேரி பேகினுள் வைத்தேன். கூடவெ இன்றிரவு பார்க்க வேண்டிய சில ஆஃபீஸ் பைல்களையும் வைத்தேன். என்னுடைய லஞ்ச் BAG ஐயும் எடுத்துக்கொண்டேன். அதை தொடும் போது, மதியம் சாப்பிட்ட சாம்பார் சாதமும், உருளைகிழங்கு வறுவலும் ஞாபகம் வந்தது. அபாரமான ருசி. சாதரணமாகவே என் மனைவி சமையலில் ஒரு கலக்கு கலக்குவாள். இன்று பின்னியெடுத்திருந்தாள்.