கல்லூரி படிப்புக்காக நான் சென்னை சென்றவன். படித்து முடித்து விட்டு சென்னையிலே வேலை செய்தேன். அப்போது என்னுடன் தங்கியிருந்த என்னுடைய ரூம் மேட்ஸ், மற்றும் பல நண்பர்கள் அனைவரும் என்னைப் போலவே வெளியூரிலிருந்து வந்தவர்கள் தான். இப்படி வந்தவர்களில் 99% பேர் சென்னையில் செட்டிலாகிவிட்டனர். ஏன்? சென்னையில் தான் வேலை வாய்ப்பு அதிகம்.