கவிதை: நிலா அவள் அருகில் வந்தாள்

(In Facebook - நிலா அவள் அருகில் வந்தாள்)

Tamil Pop Album : Sam's Pops Pops
Sung by: Srinivas
Written/Composed by: Sampath
Year: 2001

நிலா அவள் அருகில் வந்தாள்
என் மனதினையே மெல்ல மெல்ல
வருடிச் சென்றாள் 
நிலா அவள் அருகில் வந்தாள்
என் மனதினையே மெல்ல மெல்ல
வருடிச் சென்றாள் 

வருடிவிட்டு சென்றவள் சிரித்துக் கொண்டாள்
ஏன் இந்த சிரிப்பு என்று கேட்டுச் சென்றேன்
உன் மனது உன்னிடம் இனி இல்லையென்றாள் 

நிலா அவள் அருகில் வந்தாள்
என் மனதினையே மெல்ல மெல்ல
திருடிச் சென்றாள் 

மென்மையான தேனிதழ்... கள் கள் கள்
அவள் பார்வையொன்று வீசினாள்... ஜில் ஜில் ஜில்
மென்மையான தேனிதழ்... கள் கள் கள்
அவள் பார்வையொன்று வீசினாள்... ஜில் ஜில் ஜில்
கால் கொலுசால் போடுவாள்...ஜல் ஜல் ஜல்
காதல் மொழி பேசம்மா... நில் நில் நில்

நிலா அவள் அருகில் வந்தாள்
என் மனதினையே மெல்ல மெல்ல
திருடிச் சென்றாள்

காதல் கணைகள் எய்தும் கண்கள்...வில் வில் வில்
என்றும் அவளை வைப்பேன் எந்தன் மன..தில் தில் தில்
காதல் கணைகள் எய்தும் கண்கள்...வில் வில் வில்
என்றும் அவளை வைப்பேன் எந்தன் மன..தில் தில் தில்
நம் நெஞ்சம் சேருமா இந்த நாளில்
உந்தன் பதில் என்னம்மா...சொல் சொல் சொல்

நிலா அவள் அருகில் வந்தாள்
என் மனதினையே மெல்ல மெல்ல
வருடிச் சென்றாள்

வருடிவிட்டு சென்றவள் சிரித்துக் கொண்டாள்
ஏன் இந்த சிரிப்பு என்று கேட்டுச் சென்றேன்
உன் மனது உன்னிடம் இனி இல்லையென்றாள்
உன் மனது உன்னிடம் இனி இல்லையென்றாள்
உன் மனது உன்னிடம் இனி இல்லையென்றாள்

By 
Sampath

Comments