கவிதை: பூவாய் வானம் தூவும்



Singer : Mahanadhi Shobana
Tamil Pop Album : Sam's Pops Pops
Song composed by : Sampath
Written by : Sampath
Year : 2001

பூவாய் வானம் தூவும்
தேனாய் பூவும் சிந்தும் 

காதல் ராகம் ஒன்று
தேகம் தாண்டிச் சென்று
மேகக் கூட்டம் கண்டு
வானை மூடிக் கொண்டு
வான்மழை தூவும்

பூவாய் வானம் தூவும்
தேனாய் பூவும் சிந்தும்

காலையின் ஓசைகள் ஓசைகள்
கேட்கவே ஆசைகள் ஆசைகள்
சோலையின் வாசங்கள் வாசங்கள்
பார்க்கவே ஆசைகள் ஆசைகள்
வானில் போகும் மேகங்கள்
போலச் செல்ல ஆசைகள்
வானமே வானமே
வான்மழை தூவு

பூவாய் வானம் தூவும்
தேனாய் பூவும் சிந்தும்

கடலலை மீதிலே மீதிலே
தூங்கவே ஆசைகள் ஆசைகள்
காதலின் பாஷைகள் பாஷைகள்
பூமியில் ஒலிக்கவே ஆசைகள்
தேசம் எங்கும் பாசத்தின்
வாசம் வீச ஆசைகள்
வானமே வானமே
வான்மழை தூவு

பூவாய் வானம் தூவும்
தேனாய் பூவும் சிந்தும்

காதல் ராகம் ஒன்று
தேகம் தாண்டிச் சென்று
மேகக் கூட்டம் கண்டு
வானை மூடிக் கொண்டு
வான்மழை தூவும்

பூவாய் வானம் தூவும்
தேனாய் பூவும் சிந்தும்

Note:
If you like it, you may listen it using the link in the 'comments' section

By
Sampath
Written in July 2001

Comments